டாஸ்மாக் கடைகளில் வரலாறு காணாத கூட்டம்: 8 நாட்களுக்கும் சேர்த்து வாங்கும் குடிமகன்கள்
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இன்று மாலை 6 மணியிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியிலிருந்து ஒரு வாரத்திற்கு டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பதால் தற்போது டாஸ்மாக் கடைகளில் வரலாறு காணாத அளவில் கூட்டம் குவிந்துள்ளது. ஒவ்வொரு குடிமகனும் கையில் பத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இதனால் ஒரு வாரத்திற்கும் சேர்த்து மதுவை வாங்கி செல்கின்றார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது.
இன்று முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை எட்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பதும் அதன் பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பலர் அதிக அளவிலான மதுவை வாங்கிச் செல்கின்றனர். இதனால் இன்றைய டாஸ்மாக் விற்பனை வரலாறு காணாத அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது