சூர்யா படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டில் தற்போது பல படங்கள் தயாரிக்கப்படும்போது ஒரு டைட்டிலும், அதன்பின்னர் ரிலீஸாகும்போது ஒரு டைட்டிலும் வைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாஸ்' என்ற படம் ரிலீஸாகும் நேரத்தில் 'மாசு என்கிற மாசிலாமணி' என்றும் ஜெயம் ரவியின் அப்பாடக்கர் திரைப்படம் 'சகலகலாவல்லன்' என்றும் மாறியது. தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெறுவதற்காகவே தமிழில் டைட்டில் மாற்றப்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வரிசையில் இன்னொரு படத்தின் டைட்டிலும் விரைவில் மாற்றப்பட உள்ளது. சூர்யா, அமலாபால் ஆகியோர்களின் சிறப்பு தோற்றத்தில் குழந்தைகளை மையமாக வைத்து பாண்டியராஜ் இயக்கியுள்ள 'ஹைக்கூ' என்ற திரைப்படத்தின் டைட்டிலும் விரைவில் தமிழில் மாற்றப்படவுள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாண்டியராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். விரைவில் 'ஹைக்கூ' படத்திற்கு தமிழ் டைட்டில் மாற்றப்படவுள்ளதாகவும், இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டிலை தேர்வு ரசிகளும் உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிந்துமாதவி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கவின், நயனா, அபிமன், கார்த்திக் குமார், வித்யா ப்ரதீப், மாஸ்டர் நிஷேஷ், பேபி வைஷ்ணவி உள்பட பலர் நடித்துள்ளனர்.சூர்யாவின் 2D எண்டடெயிமெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், பிரவீண் படத்தொகுப்பும் செய்கின்றனர். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout