close
Choose your channels

'கனெக்ட்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

Monday, December 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நடித்த நயன்தாரா நடித்த ’கனெக்ட்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் திரைப்படம் இடைவேளை இன்றி திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இடைவேளை இன்றி திரையிட திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் படக்குழுவினர்களுக்கு இடைவேளை விட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த படத்தை இடைவேளையுடன் திரையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 99 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த படத்தின் முதல் பாதி 59 நிமிடங்கள் இரண்டாவது பாதி 40 நிமிடங்களும் திரையிடப்படும் என தெரிகிறது .

99 நிமிடங்கள் நான்ஸ்டாப்பாக இந்த படத்தை பார்க்கலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த முடிவை வரவேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், அனுபம்கெர் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் ரிசார்ட் கேவின் படத்தொகுப்பில் பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘மாயா’ படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment