மகளுக்கு புத்தாடை வாங்க 2 ஆண்டுகள் பிச்சை எடுத்த தந்தை.

  • IndiaGlitz, [Saturday,April 08 2017]

ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்பதை நிரூபிக்கும் வகையில் பிச்சைக்காரர் ஒருவர் தனது மகளுக்கு புத்தாடை அணிந்து அழகு பார்க்க இரண்டு ஆண்டுகள் பிச்சை எடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஹூசைன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தால் தனது வலது கையை இழந்தார். அதனால் அவரால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் பிச்சை எடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஒருநாள் தன் மகளுடன் ஜவுளிக்கடைக்குச் சென்ற அவர், மகளுக்கு புத்தாடை ஒன்றை வாங்கித்தர விரும்பினார் ஆனால், கடைக்காரர் அவரை பிச்சைக்காரன் என்பதால் விரட்டியிருக்கிறார். அவருடன் சென்ற மகள் தன் தந்தை அவதிக்கப்பட்டதைப் பார்த்து கண்ணீர் சிந்தியுள்ளார். மகளின் கண்ணீரை துடைக்க அன்றே முடிவு செய்த ஹூசைன் அன்று முதல் பிச்சை எடுக்கும் பணத்தின் ஒரு பகுதியை தனது மகளுக்கு புத்தாடை வாங்குவதற்காக சேமித்து வைக்க முடிவு செய்தார் தற்போது அவருடைய கனவு நனவாகிவிட்டது. ஆம், இரண்டு ஆண்டுகள் சிறுக சிறுக சேமித்து வைத்த ஹூசைன், மகளுக்கு புத்தாடை வாங்கி அதனை தனக்கு தெரிந்தவர் ஒரிவரிடம் இருந்து செல்போன் வாங்கி புகைப்படமும் எடுத்துள்ளார்.

தன்னுடைய கஷ்டம் எதுவுமே தனது மகள் அனுபவிக்க கூடாது என்பதற்காக மகளை படிக்க வைத்து கொண்டிருக்கும் ஹூசைன் அதற்கும் சிறுக சிறுக சேமித்து வைத்து கொண்டிருக்கின்றார். தான் ஒருநாள் புதிய செல்போன் வாங்கி அதில் மகளை விதவிதமாக புகைப்படம் எடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறும் ஹூசைன், பிச்சை எடுத்து மகளை படிக்க வைப்பது சவாலாக இருந்தாலும் மகளின் எதிர்காலத்தை கருதி தனது கஷ்டத்தை பொறுத்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் சில சமயம் தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மகள் தேர்வு எழுத முடியாத நிலை வரும்போது தான் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது என்று கண்ணீருடன் கூறுகிறார் ஹூசைன்

தான் பிச்சை எடுப்பதை தினம் தினம் பார்த்து மனதுக்குள் தனது மகள் கஷ்டப்படுவதை தான் உணர்வதாகவும், ஆனால் இன்று அவள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து தான் எல்லையில்லா ஆனந்தம் அடைவதாகவும் கூறுகின்றார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஜி.எம்.பி.ஆகாஷ் என்ற புகைப்படக்கலைஞர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன் ஹூசைன் தன் மகளை புத்தாடையுடன் மொபைலில் புகைப்படம் எடுப்பது போன்ற படத்தையும் பகிர்ந்திருக்கிறார்,. இந்த ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

More News

ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் ராஜாவையும் தடுப்பார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்ததும், பின்னர் ஒருசில அரசியல்வாதிகளின் எதிர்ப்பு காரணமாக ரஜினிகாந்த் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதும் தெரிந்ததே...

ஐடி சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணம். 85% வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பட்டுவாடா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராய் இரைத்து கொண்டிருக்கும் தகவல்கள் காரணமாக நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஐடி ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் ஒரு முக்கிய ஆவணம் சிக்கியிருப்பதாகவும், அதில் ஆர்.கே.நகரில் உள்

கால் நூற்றாண்டு இசை சரித்திரம்

இந்த 2017 தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மணிரத்னத்தின் இருபத்தைந்தாவது திரைப்படமான 'காற்று வெளியிடை' வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டுடன் AR ரஹ்மான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் கழிகின்றன. மணிரத்னமும் ரஹ்மானும் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. மணிரத்னம்-ரஹ்மான்-வைரமுத்து க

டாஸ்மாக் கடைகளுக்கு இடம் வாடகைக்கு கொடுத்தால்? வாட்ஸ் அப்-இல் பரவி வரும் ஒரு வினோத எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அருகில் இருந்த சுமார் 3000க்கும் அதிகமான கடைகள் இழுத்து மூடப்பட்டது. இந்த கடைகளை வேறு இடத்தில் மாற்றுவதற்காக அரசு அதிகாரிகள் 500 மீட்டருக்கு அப்பால் வாடகைக்கு இடம் பிடிக்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிபாரிசின் பேரில் தேசிய விருதுகள். ஏ.ஆர்.முருகதாஸ் ஆதங்கம்

64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் விருதுக்கு தேர்வு பெற்ற ஒருசிலர் பாரபட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.