இசைஞானி இசையில் உருவாகும் ஆங்கிலம், பான் இந்தியா திரைப்படம் குறித்த அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1,422 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. காதலர் தினத்தையொட்டி வெளியான இந்த அறிவிப்பில் பல சுவாரசியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
கன்னட இயக்குநரான அஜித் வாசன் உஜ்ஜினா என்பவர் இயக்கவிருக்கும் புதுத் திரைப்படம் “A Beautiful breakup”. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்படவுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இது அவருக்கு 1,422 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதல் மற்றும் த்ரில்லரை கதைக்களமாக வைக்கு எடுக்கப்படும் இந்த திரைப்படம் லண்டன் மற்றும் இந்தியாவில் நடைபெறுவதாக அமைக்கப் பட்டுள்ளதாகவும் இருவர் மட்டுமே இந்தத் திரைப்படத்தில் இருப்பார்கள் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே மாதத்தில் இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா பல தலைமுறைகளைத் தாண்டி தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 1975 இல் இசையமைக்க ஆரம்பித்த அவர் இதுவரை 9 மொழிகளில் 1,400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 1,422 ஆவது திரைப்படமாக A Beautiful breakup திரைப்படம் அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இதுகுறித்த அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com