கேரளாவுக்குள் நுழைய கூடாது: பேராயர் பிராங்கோவுக்கு நீதிமன்றம் உத்தரவு
- IndiaGlitz, [Monday,October 15 2018]
கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேராயர் பிராங்கோ என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பேராயர் பிராங்கோவுக்கு ஏற்கனவே இருமுறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதாகவும், அதே நேரத்தில் அவர் கேரளாவுக்குள் நுழைய கூடாது எனவும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
பேராயர் பிராங்கோவுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதற்கு சமூக வலைத்தள பயனாளிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.