தனுஷ் பட நாயகிக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,August 21 2022]

தனுசுடன் நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகை சோனம் கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆனந்த் அஹூஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் அவர் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பதும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் கணவருடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சோனம் கபூர் கர்ப்பம் அடைந்தார் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான ’ராஜன்னா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக சோனம் கபூர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.