நடிகர் யோகிபாபுவின் வீட்டுக்கு வந்த புதுவரவு: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Monday,December 28 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் யோகிபாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகரும் இயக்குனருமான மனோபாலா இதனை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து யோகிபாபுவுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

யோகிபாபுவின் வீட்டுக்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.