சிம்பு வீட்டுக்கு புதியதாக வந்த தேவதை... ரசிகர்கள் கொண்டாட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் வீட்டிற்கு புதிதாக தேவதை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவருக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிந்ததே. இருப்பினும் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் அவருக்காக பெண் பார்த்து வருகிறார் என்பதும் இந்த ஆண்டுக்குள் அவருக்கு அநேகமாக திருமணம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிம்புவின் சகோதரி இலக்கியாவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அபிலேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது இலக்கியாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
’எங்கள் வீட்டின் தேவதை’ என இலக்கியா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இலக்கியாவின் வீட்டிற்கு வந்த புது தேவதையை சிம்புவின் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments