வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து.. பரிதாபமாக பலியான பிரபலம்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பிரபலம் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன் என்பதும் அவர் போது ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேளம்பாக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஸ்டண்ட் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின்போது ரோப் திடீரென அறுந்து விழுந்ததால் அதில் நடித்துக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.