'அறம்' இயக்குனரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் விபத்து: பரிதாபமாக பலியான உயிர்..!

  • IndiaGlitz, [Wednesday,December 27 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது ’அகரம் காலனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள செங்குன்றம் என்ற பகுதியில் அரிசி ஆலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் லைப் மேன் ஆக பணிபுரிந்த சண்முகம் என்பவர் திடீரென எதிர்பாராமல் ஏற்பட்ட மின்சார விபத்தில் தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ’அகரம் காலனி’ படக்குழுவினர்களை பெரும் அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாக தெரிகிறது.

More News

வாட்டர் பேபியாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்: பீச்சில் பிகினி ஆட்டம்..!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் பீச்சில் பிகினி அணிந்து வாட்டர் பேபியாக மாறிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இங்க குரூப்பா இருக்குறவங்க வெளியே போனா என்ன செய்வாங்க: ரவீனா கூறியது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி 85 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக  சென்று கொண்டிருக்கும் நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் மூலம் இதுவரை  மறைமுகமாக தெரிந்த இரண்டு குரூப்புகள்

ஜனவரி 12ல் வெளியாகும் பூர்ணிமா படம்.. அதற்குள் வெளியே வந்துவிடுவாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பூர்ணிமா நடித்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அவர் வெளியே வந்து விடுவாரா என்ற

'தளபதி 68' படத்தில் இணைகிறாரா 'ஜெயிலர்' நடிகை? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

 தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? 6 நாட்களில் வசூலை குவிக்க வாய்ப்பு..!

தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.