சிங்கிளாக மாறிய 73 வயது பாட்டி… புது காதலரை கைப்பிடித்த ஆச்சர்யம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவைச் சேர்ந்து பெண் ஒருவர் தன்னுடைய 40 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு 3 வருடங்கள் தனிமையில் இருந்துள்ளார். பின்னர் 73 வயதான நிலையில் புதுக் காதலரை தேர்வுசெய்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வு பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா நேரத்தில் பலரும் தனிமைக்கான அர்த்தத்தை உணர்ந்துள்ளனர். இதனால் உலகம் முழுவதும் மனிதநேயம் மிக்க செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த கரோல் எச்.மேக் எனும் 70 வயதான பாட்டியும் கொரோனா காலத்தில் தன் மனதிற்குப் பிடித்த காதலரை சந்தித்துள்ளார். பின்னர் 73 வயதான நிலையில் தற்போது மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணமும் செய்திருக்கிறார். இந்த நிகழ்வு பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய கணவருடன் 40 ஆண்டுகாலம் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த கரோல் அவர் ஏமாற்றியதால் கடந்த 12 ஆண்டுக்கு முன்னர் அவரைவிட்டு பிரிந்திருக்கிறார். மேலும் 3 வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் பெற்றுள்ளார். இதையடுத்து தனிமையில் வாடிவந்த கரோல் கொரோனா நேரத்தில் தன்னுடைய உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு மனிதரைச் சந்தித்ததால் தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து சமூகவலைத் தளத்தில் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட கரோல், மோதிரம் மாற்றிய புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார். நரம்புகள் வெளியே தெரிய இருக்கும் அந்த கையில் ஒரு புது பந்தத்திற்கான அடையாளம் மின்னுகிறது. இந்தத் தகவல் இளசுகளிடம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Life is so strange. After nearly four decades of marriage, I never expected to be single again at 70. And I certainly didn’t expect to find true love at the age of 73 in the middle of a pandemic! And now this! pic.twitter.com/HszN0zj9pr
— Carol H. Mack (@AttyCarolRN) February 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments