பாலியல் தொல்லை: ஓடும் ரயிலில் இருந்து குதித்த சென்னை இளம்பெண்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திராவில் ஓடும் ரயிலில் சென்னையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மூன்று நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் ரயிலில் இருந்து குதித்தார். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் எஞ்சியரான இளம்பெண் நேற்று நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜயவாடாவுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ஓடும் ரயிலில் மூன்று நபர்கள் அந்த இளம்பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசியதோடு பாலியல் தொல்லை கொடுக்கவும் முயற்சித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி ஓடும் ரயிலில் இருந்து குதித்தார். இதனையடுத்து ஒரு பயணி செயினை பிடித்து இழுத்தி ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து ரயில்வே போலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. கீழே விழுந்த அந்த பெண்ணை படுகாயங்களுடன் மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய பெற்றோர்களுக்கும் போலீசார் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 342, 506, 509, 290 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com