தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்... துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட19 வயது மாணவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பங்களாதேஷில் தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என போலீசில் புகார் கொடுத்த மாணவியை சிலர் துடிக்க, துடிக்க, உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து, சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெனி நகரை சேர்ந்தவர், 19 வயது மாணவி நஸ்ரத் ஜகான் ரபி.
இவர் அதே பகுதியில் உள்ள, தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நஸ்ரத் ஜகானை வற்புறுத்தி, அவருடை அறைக்கு அழைத்துச் சென்று தவறான எண்ணத்தில் அணுகி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நஸ்ரத் ஜகான் ரபி, இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசாரும் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள், இணைந்து தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வற்புறுத்தி போராட்டம் வரை சென்றனர். நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்ததாகவும் கூறினர்.
இந்நிலையில் இந்தப் புகாருக்கு பின் தேர்வு எழுதுவதற்காக மாணவி நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது தோழி ஒருவர் அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் மாணவியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் வாங்கும் படி கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த மாணவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
இந்த சம்பவத்தில் மாணவி நஸ்ரத் ஜகான் ரபி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பள்ளி மாணவி ஒருவரை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com