22 வயது இளைஞனிடம் சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவி: மெரீனாவில் நடந்த கொடூரம்

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

சென்னை மெரினா கடற்கரையில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை மெரினா கடற்கரைக்கு சமீபத்தில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனியாக வந்துள்ளார். அந்த அந்த சிறுமியை கவனித்த அங்கு கடை ஒன்றில் வேலை பார்க்கும் 22 வயது இளைஞர் ஒருவர் அந்த சிறுமியிடம் அவரை குறித்து விசாரித்துள்ளார்

அப்போது அவர் தனியாக வந்திருப்பதையும், பள்ளியை கட் அடித்துவிட்டு வந்திருப்பதையும், பெற்றோர் மீது மனவெறுப்பில் இருப்பதையும் பேச்சு கொடுத்து தெரிந்து கொண்டார். பின்னர் அந்த சிறுமியிடம் அன்பொழுக பேசிய இளைஞர் தனது கடைக்குள் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது

இதனை அடுத்து சிறுமி அழுது கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் கூறிய அந்த இளைஞர், தான் இன்று ஊருக்கு செல்வதாகவும் தன்னுடன் வந்தால் இருவரும் சேர்ந்து இருக்கலாம் என்றும் கூறி அழைத்து சென்றுள்ளார்

இந்த நிலையில் இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். சிறுமி அழுது கொண்டும் இளைஞர் சந்தேகத்துக்கு இடமாகவும் இருந்ததையும் பார்த்த சிலர் சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் தெரிந்து உடனடியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த சைல்டு ஹெல்ப்லைன் சங்க உறுப்பினர்கள் அந்த இளைஞரையும் சிறுமியையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

காவல்நிலையத்தில் இளைஞரைச் போலீஸ் தரப்பில் விசாரித்தபோது 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பின் நடந்த விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் அன்பழகன் என்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்பழகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்