இறந்த பாட்டியின் உடலில் ஒளிந்திருந்த அதிசயம், 2 வருடத்திற்கு பின் கண்டுபிடித்து மாணவர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ரோஸ்மேரி, கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவர் இறந்த பின் இவருடைய உடல் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிக்காக குடும்பத்தினர் கொடுத்தனர். இந்நிலையில் இவருடைய உடலை உடற்கூறு ஆய்வு செய்தபோது மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது ஓரிகனை சேர்ந்த 99 வயதான ரோஸ்மேரி, உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இடம் மாறி இருக்கும், அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது போன்ற பிரச்சனை 5 கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும்.
இப்படிப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள், இதயப் பிரச்சனை மூட்டு வலி, கை -கால் வலி, நரம்பு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் 99 வயது வரை வாழ்ந்து வந்துள்ளார் ரோஸ்மேரி. இந்நிலையில், ஏற்கனவே இவருக்கு குடல் வால்வு பிரச்சனை இருந்ததால் அதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது குடல் வால்வு இடமாறி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக மட்டுமே ரோஸ்மேரியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் இவருடைய உடலை உடல்கூறைவு செய்து, ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது... வயிற்றிலுள்ள கல்லீரல், கணையம், பித்தப்பை, பெருங்குடல் மட்டுமின்றி, இதயமும் இடம் மாறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரோஸ்மேரி இறந்து இரண்டு வருடத்திற்கு பின்பே இந்த உண்மை தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் ரோஸ் மேரியின் குடும்பத்தினர் 99 வயது வரை அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்தார் என கூறி ஆராச்சியாளர்களுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments