'99 சாங்ஸ்' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மானின் கதையா? அவரே அளித்த விளக்கம்

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் எழுதி, இசை அமைத்து, தயாரித்த ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஷங்கர், கே.எஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் இந்த படத்தின் கதை என்னுடைய கதை என்று சிலர் சொகிறார்கள். ஆனால் இது என்னுடைய கதை அல்ல. ஒரு கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் உலகத் தரத்திலான அனைத்து படங்களையும் தயாரிக்க முடியும் என்றும் அதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்ட கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.