காதலர் தினத்தில் '96' படக்குழுவினர் தரும் சர்ப்ரைஸ்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ போல் எப்போதாவது மறக்க முடியாத திரைப்படங்கள் வருவதுண்டு. அந்த வகையில் 'ஆட்டோகிராப்' படத்திற்கு பின் படம் பார்த்த அனைவரின் பள்ளிக்கால மலரும் நினைவுகளை தட்டியெழுப்பி அதில் மூழ்கடித்த படம் என்றால் அது '96' திரைப்படம் தான். இன்னும் சில ஆண்டுகளுக்கு ராம், ஜானு கேரக்டரை படம் பார்த்தவர்களால் மறக்க முடியாது. அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்ததால் இந்த படம் 100 நாள் என்ற மைல்கல்லை எட்டி மிகப்பெரிய வெற்றியை வசூல் அளவிலும் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்பதிவும் தற்போது தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்கள் பலர் இந்த படத்தை பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல நடிகரின் படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து படங்கள் வெளியான போதிலும் ஒருசில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் உள்ளது.

அஜித் எடுத்த தெளிவான முடிவு: சரத்குமார் பாராட்டு

சமீபத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தவுடன் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், அஜித் ரசிகர்களும், அஜித்தும் தமிழகத்தில் தாமரை மலர உதவ வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தார்

மகள் செளந்தர்யாவுக்காக ரஜினி-லதா கொடுத்த விதைப்பரிசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா-விசாகன் திருமணம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று சென்னை ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

விஜய் சகோதரருக்காக இணைந்த 6 திரையுலக பிரபலங்கள்

தளபதி விஜய்யின் சகோதரரும் நடிகருமான விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பக்ரீத்' படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் நேற்றே அறிவித்திருந்தனர்

நான் பிக்பாஸையே பார்த்தவடா... 90ml டிரைலர் விமர்சனம்

ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 90ml திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ஓவியா ஆர்மியினர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.