காதலர் தினத்தில் '96' படக்குழுவினர் தரும் சர்ப்ரைஸ்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூ போல் எப்போதாவது மறக்க முடியாத திரைப்படங்கள் வருவதுண்டு. அந்த வகையில் 'ஆட்டோகிராப்' படத்திற்கு பின் படம் பார்த்த அனைவரின் பள்ளிக்கால மலரும் நினைவுகளை தட்டியெழுப்பி அதில் மூழ்கடித்த படம் என்றால் அது '96' திரைப்படம் தான். இன்னும் சில ஆண்டுகளுக்கு ராம், ஜானு கேரக்டரை படம் பார்த்தவர்களால் மறக்க முடியாது. அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்ததால் இந்த படம் 100 நாள் என்ற மைல்கல்லை எட்டி மிகப்பெரிய வெற்றியை வசூல் அளவிலும் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்பதிவும் தற்போது தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்கள் பலர் இந்த படத்தை பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.