close
Choose your channels

'96' ரீமேக் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Saturday, January 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ராம்-ஜானு கேரக்டர்களாக வாழ்ந்த திரைப்படம் '96'. இந்த படம் தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி, படம் பார்த்த ஒவ்வொருவரையும் தங்கள் பள்ளி காலத்து மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், ராம், ஜானு கேரக்டரில் சர்வானந்த், சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இந்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தயாரிக்கும் 34வது படம் இது என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'96' படத்தை தமிழில் இயக்கிய பிரேம்குமார் இயக்கும் இந்த படத்தில் '96' படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்களே இந்த படத்திலும் பணிபுரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment