விஜய்சேதுபதியின் '96' பட டைட்டில் '99'; ஆக மாற்றம்

  • IndiaGlitz, [Sunday,December 09 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சூப்பர்ஹிட் வெற்றிப்படம் '96'. உணர்வுபூர்வமான காதல் திரைப்படமான இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே ரசித்ததால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட்டான '96' திரைப்படம் தற்போது கன்னட மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. '99' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை பிரீதம் குபி என்பவர் இயக்கவுள்ளார்.

அர்ஜூன் ஜான்யா இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் ராஜ் பாதஜா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். த்ரிஷாவின் 'ஜானு' கேரக்டரில் நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

அஜித்தின் 'விஸ்வாசம்' மலேசியாவில் இன்று செய்ய போகும் சாதனை

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

தனுஷ் மகன்களுடன் '2.0' படம் பார்த்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் '2.0'

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகை! அதிமுகவில் சேருவாரா?

கடந்த 90களில் பிரபலமாக இருந்த நடிகை கஸ்தூரி தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அதிரடி அரசியல் கருத்துக்களை கூறி வருவது தெரிந்ததே.

ஹீரோவாக மாறிய பிரபல இயக்குனர்

'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராகிய இயக்குனர் கெளதம் மேனன் அதன்பின்னர் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'என்னை அறிந்தால்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த நடிகர் கஞ்சா கருப்பு

பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தின் மூலம் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் கஞ்சா கருப்பு அதன்பின் சிவகாசி, திருப்பதி, சிவப்பதிகாரம், , பருத்திவீரன், ராம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.