'96' ராம், ஜானு செய்ய போகும் மிகப்பெரிய சாதனை!

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தொலைக்காட்சியில் வருவதற்கு முன் வானொலிகளில் ஒலிச்சித்திரம் என்ற ஒன்று ஒளிபரப்பாகும் என்பது 80களின் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த காலகட்டத்தில் திரைப்படங்களின் வசனங்களை மட்டும் வானொலியில் ஒளிபரப்பும் ஒலிச்சித்திரம் நிகழ்ச்சிக்க்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். பாடல்களை வெட்டிவிட்டு ஒரு மணி நேரத்தில் ஒரு முழு திரைப்படத்தை ஒலிச்சித்திரமாக வானொலிகள் ஒளிபரப்பும்

நாளடைவில் தொலைக்காட்சி மற்றும் நவீன டெக்னாலஜி வந்த பிறகு ஒலிச்சித்திரம் என்ற ஒன்றே மறந்து போய்விட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒலிச்சித்திரம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒலிச்சித்திரம் தனியார் வானொலி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. நாளை காதலர் தினத்தை முன்னிட்டு இரவு 9 மணிக்கு விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’ படத்தின் ஒலிச்சித்திரம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம், ஜானுவை திரையில் கண்ட ரசிகர்கள் அந்த கேரக்டர்களை கற்பனையில் நினைத்து கொண்டே இந்த ஒலிச்சித்திரத்தை கேட்கும் அனுபவம் உண்மையில் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜாக்பாட்.. சதுரங்க வேட்டை பட கதைகளை கலந்து, ரூ.2 கோடிக்கு அட்சய பாத்திரம் விற்ற மோசடி கும்பல்..!

தன் வீட்டுக்கு ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாள்கள் கழித்து திறந்துபார்த்தார். நகைகள் இருக்கும் புதையலை அந்தப் பெட்டி காட்டவில்லை.

அசாத்திய அரசியல் வெற்றி; யார் இந்த பிரசாந்த் கிஷோர்? தமிழகத்தில் இவரது வியூகம் பலிக்குமா?

இந்தியாவில் ஐபேக் நிறுவனத்தின் அரசியல் வியூகங்கள் மிகவும் பிரபலம். இந்த நிறுவனம் யார் பின்னால் நிற்கிறதோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்று பெரும்பாலும் நம்பப் படுகிறது.

ஹெல்மெட்டுக்குள் சுருண்டு கிடந்த பாம்பு..தலையில் சுமந்தபடி 11 கி.மீ பயணித்த ஆசிரியர்..!

பாம்பைத் தலையில் சுமந்தபடி பயணித்ததால் பயமடைந்த அவர் உடனடியாக நண்பரின் உதவியுடன் தாலுகா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன.

உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பெற போகிறது தஞ்சை பெரிய கோவில்..! ஒருங்கிணைப்புக்குழு முழு முயற்சி.

பெரிய கோயிலை உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்ப்பதற்காக சமூக ஆர்வலர்கள் இணைந்து குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

70 குழந்தைகள் முன்னிலையில் நடுவானில் வெளியான 'வெய்யோன் சில்லி

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் 'வெய்யோன் சில்லி' என்ற பாடல் நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏழை மாணவர்கள் முன்னிலையில் வெளியாகும்