close
Choose your channels

கார்த்தியின் 27வது படத்தை இயக்கும் சூப்பர் ஹிட் ரொமான்ஸ் பட இயக்குனர்.. விரைவில் அறிவிப்பு..!

Saturday, July 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தி தற்போது ’ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவருடைய 26வது திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கார்த்தியின் 27வது திரைப்படத்தை சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ’96’ என்ற கவிதைத்தனமான காதல் திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் கார்த்தியின் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் ’கார்த்தி 27’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. நலன் குமாரசாமி படத்தை முடித்தவுடன் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்தியின் ’ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos