பிகினி உடையில் '96' பட நடிகை.. கோவாவில் கலக்கும் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2024]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் இளம் வயது த்ரிஷா கேரக்டரில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவாவில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’96’ திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் நடிகை கௌரி கிஷான். அதன் பிறகு இவர் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ ’அடியே’ ’உலகம்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ’போட்’ திரைப்படத்திலும் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷான் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது அவர் தனது தோழிகளுடன் கோவா சென்று இருக்கும் நிலையில் அங்கு அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சி, தோழிகளுடன் நடனமாடும் காட்சிகளுடன் கூடிய வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.