96 திரைப்பட நடிகை கௌரிக்கு  கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் “96’‘. இத்திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக (ஜானு) நடித்து இந்தவர் நடிகை கௌரி கிஷன். இவர் அறிமுகமான முதல் திரைப் படத்திலேயே ஹீரோயின் அளவிற்கு பெரிதும் கவனம் பெற்றார். இதனால் இவரது அடுத்த திரைப்படம் எதுவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு அவர் நடித்து இருந்த குட்டி த்ரிஷா “ஜானு” கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்து இருந்தது.

இதையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் தோன்றிய இவர் மாஸ் என்ட்ரியாக தளபதி விஜய் நடிப்பில் உருவான “மாஸ்டர்“ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீசாக இருக்கும் “கர்ணன்” படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் கௌரி நடித்து இருக்கிறார்.

அவர் தற்போது தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் கடந்த வாரம் முதல் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் தான் நன்றாக இருப்பதாகவும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு எல்லோரும் கொரோனா விழிப்புடன் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு “மாஸ்டர்” திரைப்பட இயக்குநர் லோகேஜ் கனகராஜ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியது. தற்போது அந்தப் படத்தில் நடித்து இருந்த கௌரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவர்களைத் தவிர நடிகர் ஆமிர்கான், நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் சச்சின் போன்ற பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.