நேற்றைவிட இன்று இருமடங்கான கொரோனா பாசிட்டிவ்: பீலா ராஜேஷ் தகவல்

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 96 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் என்பதும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று கொரோனாவால் 48 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரு மடங்காக 96 பேர் பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 59918 என்றும், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 என்றும், இதுவரை 32896 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாகவும், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனாவில் இருந்து மீண்ட மகன்: மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மலையாள இயக்குனர்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த தனது மகனை குணமாக்கிய கேரள மருத்துவர்களுக்கு பிரபல மலையாள இயக்குநர் பத்மகுமார் நன்றி கூறியுள்ளார்.

முன்னணி நடிகர்களுக்கு உதயநிதி வைத்த வேண்டுகோள்

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்ததை போல் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மே மாதத்தில் 10ஆம் வகுப்பு தேர்வா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது

அக்டோபர் வரை ஹோட்டல்கள் மூடப்பட வேண்டுமா? சுற்றுலாத்துறையின் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை தான் இயக்க உள்ளதாகவும் அந்த படத்தை இயக்க கிடைக்கும் சம்பளத்தில் அட்வான்ஸ் பணம் ரூபாய் 3 கோடியை பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாகவும்