காருக்குள் இருக்கும்போது இதைமட்டும் தயவு செய்து செய்யாதீங்க.. '96' நடிகை வேண்டுகோள்!

  • IndiaGlitz, [Saturday,September 10 2022]

காருக்குள் இருக்கும் போது தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வர்ஷா பொம்மலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும்போது, ‘உங்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் மழை நேரத்தில் காரில் பயணம் செய்யும்போது உங்களை சுற்றி உள்ளவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நீங்கள் மிகவும் சௌகரியமாக முறையில் உட்கார்ந்து கொண்டு காரை ஓட்டி செல்வீர்கள். ஆனால் உங்களை சுற்றியுள்ள இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்பவர்கள் மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்கள் பெரிய அளவில் செளகரியம் இருக்காது.

இந்த நிலையில் நீங்கள் அதிவேகமாக காரை மழை நேரத்தில் ஓட்டும் போது சாலையில் உள்ள தண்ணீர் இருசக்கர வாகனங்கள் அல்லது மூன்று சக்கர வாகனங்களில் செல்வோர் மீது தெளிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்படும். இதனை மனதில் கொண்டு மழை நேரத்தில் காரில் செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டுகிறேன். இது உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு மிகவும் செளகரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.