'தளபதி 64' படத்தில் நடிப்பதை உறுதி செய்த விஜய்சேதுபதி பட நடிகை!

  • IndiaGlitz, [Sunday,November 10 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பதையும் இந்த படப்பிடிப்பில் நாயகி மாளவிகா மேனன் சமீபத்தில் இணைந்தார் என்ற செய்தியையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்த ’96’ படத்தில் கௌரி கிஷான் நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ’தளபதி 64’ படத்தில் நான் நடிக்கின்றேனா? இல்லையா? என்பது குறித்து என்னிடம் பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நான் தரும் பதில் ’ஆம்’ என்பதுதான்.

'தளபதி 64’ படத்தில் தளபதியுடன் நடிப்பதிலும் இயக்குனர் லோகேஷ் அவர்களின் இயக்கத்தில் நடிப்பதிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் அனைவரும் ஆசிர்வாதத்தால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கெளரி கிஷான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள கெளரி கிஷான், படப்பிடிப்பின் இடையே அவர் டெல்லியில் ஷாப்பிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.