என்ன ஜானு இதெல்லாம்.. 'பிகினி' காஸ்ட்யூமில் '96' நடிகை.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகை கௌரி கிஷன் ‘96’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இவர் இள வயது த்ரிஷாவாக ஜானு என்ற கேரக்டரில் நடித்த நிலையில் இந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது

அதன் பிறகு தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கௌரிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ‘என்ன ஜானு இதெல்லாம்’ என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.