ஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக 500, 600 என இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 874 என ஒரே நாளில் அதிகபட்சம் என்ற சாதனையை நிகழ்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதையும் தாண்டி 938 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இன்று தமிழகத்தில் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 874 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 616 என்பதும் சென்னையில் மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு 600ஐ கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,980ஆக அதிகரித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 687 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12000 என உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 12605 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 479,155 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.