வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த 90களின் பிரபல ஹீரோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 90களின் பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் தரப்பு தற்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வரும் ’கஸ்டடி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடத்தி வருகிறார் என்பதும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் 90களில் பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் ராம்கி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் ராம்கிக்கு என்ன கேரக்டராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Another Versatile Actor in our #Custody ❤️🔥
— Srinivasaa Silver Screen (@SS_Screens) January 12, 2023
We are delighted to Welcome the Most Passionate ACTOR #Ramki garu Onboard 🔥
A @vp_offl HUNT💥#CustodyOnMay12@chay_akkineni @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @realsarathkumar @SS_Screens pic.twitter.com/kUZBltpQoq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com