ஓவியா ரசிகரளுக்கான புத்தாண்டு பீர்-பிரியாணி

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்;' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து வரும் 'காஞ்சனா 3', '90ml', 'களவாணி 2' ஆகிய படங்கள் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஓவியா நடித்து வரும் ''90ml' திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சிம்புவின் இசையில் ஓவியா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஓவியாவின் ரசிகர்களுக்கான புத்தாண்டு விருந்தாக இன்று மாலை '90ml' படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகவுள்ளது. 'பீர் பிரியாணி என்று தொடங்கும் இந்த பாடலை வரவேற்க சிம்பு மற்றும் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.