close
Choose your channels

ஓவியாவின் '90ml' படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்: இயக்குனர் தகவல்

Thursday, February 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற நடிகை ஓவியா தற்போது 'காஞ்சா 3', ''90ml' , களவாணி 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் இவை மூன்றும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓவியா நடிப்பில் உருவாகி வரும் '90ml' படத்தை இயக்கி வரும் இயக்குனர் அனிதா உதீப் இந்த படம் குறித்து கூறியபோது, 'இந்த படம் பெண்கள் ஒரு கட்டமைப்பில் வாழாமல் அதை உடைத்து காதல், திருமணம் உள்பட முக்கிய முடிவுகளை சொந்தமாக எடுக்கும் துணிச்சல் மிகுந்த பெண் கேரக்டர் குறித்த படம். இந்த கேரக்டரில்தான் ஓவியா நடித்துள்ளார். அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும், அவருடைய மிடில் கிளாஸ் தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே இந்த படத்தின் பிரதான காட்சிகள் ஆகும். இந்த காட்சிகளில் சில இரட்டை அர்த்த வசனங்களும் உண்டு என்று கூறியுள்ளார்.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் கடந்த ஆண்டு வெளியான சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது., இந்த படத்தில் ஓவியா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment