close
Choose your channels

அயோத்தி ராமர் கோவிலில் 90 வயதில் பரதநாட்டியம் ஆடிய தமிழ் நடிகை.. சிவாஜி, ஜெமினியுடன் நடித்தவர்..!

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் பல திரைப்படங்கள் நடித்த 90 வயது நடிகை சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1949 ஆம் ஆண்டு ’வாழ்க்கை’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை வைஜெயந்திமாலா. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் ’இரும்புத்திரை’ காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பரதநாட்டிய கலைஞரான வைஜெயந்திமாலா அவர்களுக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் சமீபத்தில் அவர் அயோத்தி ராமர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த வயதிலும் அவர் பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக ஆடியதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்பதும் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் வைஜெயந்திமாலா பரதநாட்டிய நிகழ்ச்சியும் ஒன்றாக இங்கு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வைஜெயந்திமாலாவுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.