90ml படத்தின் கதை ஓவியாவின் உண்மைக்கதையா? அனிதா உதூப்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ஓவியாவின் 90ml படத்தின் டீசர் வெளியான நிலையில் இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பாணி படமென்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து இயக்குனர் அனிதா உதூப் இந்த படத்தின் கதை அனைவரும் நினைப்பது போன்ற கதை இல்லை என்றும் தமிழில் இதுவரை வெளிவராத வித்தியாசமான கதை என்றும் கூறியுள்ளார்.
ஒரு அபார்ட்மெண்டில் வாழும் ஐந்து பெண்கள், பியூட்டி பார்லர் வைத்திருக்கும் ஒரு பெண், குக்கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்த ஒரு பெண், திருமணத்தின் மீது நம்பிக்கையில்லாத ஒரு ஐடி பெண் மற்றும் புதியதாக திருமணமான பெண் என்ற இந்த ஐந்து பெண்களின் நட்புதான் இந்த படத்தின் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னரும் ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் நேரத்தை கழிக்கின்றனர். ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு பின் தனது நட்பை தியாகம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அலசுவதுதான் இந்த் படத்தின் கதை என அனிதா உதூப் மேலும் தெரிவித்துள்ளார்.
காதலில் கூட தோல்வி உண்டு, ஆனால் நட்பில் தோல்வியே கிடையாது என்ற ஒன்லைன் கதையை ஓவியாவிடம் சொன்ன போது, என் ரியல் லைஃப் கதை போல இருக்கேன்னு ஓவியா கூறியதாகவும் அனிதா உதூப் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments