'தளபதி 68' படத்தில் 90களின் பிரபல ஹீரோ நடிக்கிறாரா? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 05 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மாஸ் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது ஏற்கனவே கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில் இந்த படத்தில் பணிபுரியும் முக்கிய பிரமுகர் ஒருவர் ’விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதால் தான் அவரது உருவம் 3டி ஸ்கேன் செய்யப்பட்டது என்றும் 3டி ஸ்கேன் மூலம் அவரது கேரக்டரை வித்தியாசப்படுத்த முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபுதேவா அல்லது பிரசாந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த 90களில் விஜய்க்கு இணையான ஹீரோவாக இருந்த பிரசாந்த் ’தளபதி 68’ படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இந்த படத்தின் நாயகிகளாக சிம்ரன் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.