மரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது
Send us your feedback to audioarticles@vaarta.com
கென்ய நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மரத்தாலான கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்ததற்காக அந்நாட்டின் அதிபரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார்
கென்யா நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவன் கொரோனா காலத்தில் தனிமனித இடைவெளியை பயன்படுத்தி கைகழுவும் இயந்திரங்கள் குறித்த செய்திகளை தொலைக்காட்சியைப் பார்த்து உள்ளார். அப்போது அவர் தன்னுடைய தந்தையிடம் நாமும் இதுபோல் ஒரு கைகழுவும் இயந்திரத்தை செய்யலாம் என்று கூறியுள்ளார்
தந்தை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அவர் நான்கு நாட்களில் மரத்தால் ஆன கைகழுவும் இயந்திரத்தை செய்துள்ளார். இந்த மெஷினை பயன்படுத்துவதற்கு இரண்டு கால்மிதிகள் அமைக்கப்பட்டுள்ளன ஒன்றைக் காலால் மிதித்தால் அதிலிருந்து சோப்பு திரவம் வெளிவரும். அதை வைத்து கைகளை நன்றாக சோப்பு நீரால் கழுவி விட்டு இன்னொரு கால்மிதியை அழுத்தினால் அதிலிருந்து வரும் தண்ணீரால் மீண்டும் கைகளைக் கழுவிக் கொள்ளலாம்
எந்தவித பொருளையும் போடாமல் இந்த கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளிவந்ததை அடுத்து அந்த வயது சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கென்யா அதிபர் அந்த சிறுவனுக்கு ஜனாதிபதி விருது அளிக்க பரிந்துரை செய்துள்ளார். சிறுவன் கண்டுபிடித்த கை கழுவும் இயந்திரம் குறித்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
Bungoma Governor @GovWWangamati & senator @Cleophasmalala committed to scout for a special school that will help narture the creative talent of Stephen Wamukota, the 9 year-old who grabbed global headlines for pioneering a home-made hand-washing & sanitizer-dispensing machine. pic.twitter.com/6RPNNFZ9Wl
— BungomaDigital (@BungomaDigital) May 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments