மரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது 

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

கென்ய நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மரத்தாலான கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்ததற்காக அந்நாட்டின் அதிபரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார்

கென்யா நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவன் கொரோனா காலத்தில் தனிமனித இடைவெளியை பயன்படுத்தி கைகழுவும் இயந்திரங்கள் குறித்த செய்திகளை தொலைக்காட்சியைப் பார்த்து உள்ளார். அப்போது அவர் தன்னுடைய தந்தையிடம் நாமும் இதுபோல் ஒரு கைகழுவும் இயந்திரத்தை செய்யலாம் என்று கூறியுள்ளார்

தந்தை கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அவர் நான்கு நாட்களில் மரத்தால் ஆன கைகழுவும் இயந்திரத்தை செய்துள்ளார். இந்த மெஷினை பயன்படுத்துவதற்கு இரண்டு கால்மிதிகள் அமைக்கப்பட்டுள்ளன ஒன்றைக் காலால் மிதித்தால் அதிலிருந்து சோப்பு திரவம் வெளிவரும். அதை வைத்து கைகளை நன்றாக சோப்பு நீரால் கழுவி விட்டு இன்னொரு கால்மிதியை அழுத்தினால் அதிலிருந்து வரும் தண்ணீரால் மீண்டும் கைகளைக் கழுவிக் கொள்ளலாம்

எந்தவித பொருளையும் போடாமல் இந்த கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளிவந்ததை அடுத்து அந்த வயது சிறுவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கென்யா அதிபர் அந்த சிறுவனுக்கு ஜனாதிபதி விருது அளிக்க பரிந்துரை செய்துள்ளார். சிறுவன் கண்டுபிடித்த கை கழுவும் இயந்திரம் குறித்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
 

More News

இளைஞரின் சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர்: சுய இன்பத்தால் ஏற்பட்ட விளைவு

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் தெரியாமல் செல்போன் சார்ஜரை விழுங்கி விட்டதாகவும் இதனால் தனக்கு தாங்க முடியாத வயிற்று வலி இருப்பதாகவும் கூறி

சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் தேதி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.

இனிமேல் பணம் இல்லை. ஒருவருடத்திற்கு எந்தத் திட்டத்திற்கும் தொகை ஒதுக்க முடியாது: கைவிரித்த நிதிஅமைச்சகம்!!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக மத்தியஅரசு அதிக நிதியை ஒதுக்கிப் பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டது. இதனால் தற்போது நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டு உள்ளது

தமிழகம் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்: 1500ஐ நெருங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று கொரோனாவின் பாதிப்பு 1500ஐ நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியை அடிக்கும் காட்சியா? படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தில் இருந்து விலகியதாக பிரபல ஹீரோ ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.