எனக்கு ஒரு செயற்கை கையை பொருத்த முடியுமா? கண்கலங்க வைத்த உக்ரைன் சிறுமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உக்ரைன் நாட்டில் ரஷ்ய இராணுவம் 22 நாட்களைக் கடந்த பிறகும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் போரால் தந்தையை இழந்து, தனது ஒரு கையையும் இழந்திருக்கும் 9 வயது சிறுமி ஒருவர் பேசியிருக்கும் கருத்து பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள கீவ் நகரில் வசித்துவந்த சாஷாவின் குடும்பம் இராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக அங்கிருந்து காரில் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். அந்தக் காரை நோக்கி திடீரென்று ரஷ்ய இராணுவம் சரமாரியாகச் சுட்டதால் சாஷாவின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சாஷாவின் தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சித்தபோது சாஷாவின் கைகளை ரஷ்யாவின் துப்பாகிகள் பதம் பார்த்துள்ளன.
இதனால் நிலைகுலைந்துபோன அவர்கள் மூவரும் ஒரு பதுங்குழிக்குள் சென்று 2 நாட்களாக ஒளிந்திருந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கி குண்டுபட்ட சாஷாவின் கைகள் காயம் காரணமாக பாதிப்பு அடைந்திருக்கிறது. இதையடுத்து பதுங்குழிக்குள் இருந்தவர்களின் உதவியோடு சாஷா ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் துப்பாக்கிச் சூடு பட்டு ஏற்கனவே 2 நாட்களை கடந்த நிலையில் சாஷாவின் ஒரு கையை மருத்துவர்கள் வெட்டியெடுத்துள்ளனர்.
இதைப்பார்த்து மிரண்டுபோன அந்தச் சிறுமி ரஷ்ய இராணுவத்தினர் என்னை தாக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார்கள், இது ஒரு விபத்துதான், யாராவது பிங்க் நிறத்தில் ஓவியம் வரையப்பட்ட செயற்கை கையை எனக்குப் பொருத்த முடியுமா? என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோள் உலக அளவில் பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.
ரஷ்யா ராணுவம் தங்களது காரின் மீது தாக்குதல் நடத்திய போதிலும் மிரண்டுபோகாத அந்தச் சிறுமி அவர்கள் என்னைத் தாக்க நினைத்திருக்க மாட்டார்கள், இது ஒரு விபத்து என்று சாஷா பேசியிருப்பது தற்போது ரஷ்யா இராணுவத்தினரின் மீதான விமர்சனத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம் ரஷ்யா உடனடியாக போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்கா நாடாளுமன்றம் போர் குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments