உலகின் சிறிய வயது பணக்காரர்… 9 வயதில் ஜெட் விமானத்தில் சுற்றும் அதிசயம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நைஜிரியாவை சேர்ந்த 9 வயது குழந்தையே தற்போது உலகின் சிறிய வயது பணக்காரர் எனும் பட்டத்துடன் வலம்வருகிறார். மேலும் இவர் தனி ஜெட் விமானத்தில் உலகத்தை சுற்றிவருவதும் ஆடம்பர ஹோட்டல்களில் தங்குவதும் பார்ப்பவர்களை கடும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நைஜிரியாவின் லாகோஸ் நகரைச் சேர்ந்தவர் இஸ்மாலியா முஸ்தபா. இணைய பிரபலமான இவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் 1.1 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருக்கிறார். இவருடைய மகன் மோம்பா ஜுனியர் எனப்படும் முகமது அவல் முஸ்தபா தற்போது உலகின் இளம்வயது பணக்காரர் ஆகியிருக்கிறார்.
காரணம் அவருடைய அப்பா இஸ்மாலியா முஸ்தபாவிடம் இருந்து 6 வயதிலேயே மோம்பா ஒரு சிறிய மாளிகையை பரிசாகப் பெற்றுள்ளார். இதைத்தவிர சிறிய ஜெட் விமானம் ஏராளமான டிசைனர் உடைகள், விதவிதமான உணவகங்களில் சாப்பாடு என்று மோம்பா ஜுனியர் தற்போது ஆடம்பரத்தில் திளைத்து வருகிறார். மேலும் துபாயிலிருந்து லாவோஸ்க்கு எந்நேரமும் அவர் பறந்துகொண்டே இருக்கும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
தனது பணக்காரத் தந்தையால் உலகின் இளம்வயது பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் மோம்பா தற்போது தொழில்துறையில் தடம்பதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது ஆடம்பர வாழ்க்கையை சோஷியல் மீடியாவில் பிரபல படுத்தியிருக்கும் மோம்பாவிற்கு 29,800 ஃபாலோயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout