குப்பையில் கண்டெடுத்த 9 சவரன் நகை: தூய்மைப்பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு!
- IndiaGlitz, [Sunday,January 09 2022]
சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பையில் 9 பவுன் நெக்லஸ் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அதனை அவர் நேர்மையாக உரியவரிடம் ஒப்படைப்பதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை புழல் அருகே விநாயகபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரோஜாமணி என்ற 47 வயதான பெண் ஒருவர் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்ய போது 9 பவுன் நெக்லஸை தொலைத்து விட்டார். இதனை அடுத்து குப்பை கழிவுகளுடன் நகையும் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து அந்த பகுதியில் குப்பை அகற்றும் தூய்மை பணியாளர் சஞ்சீவ் குமார் என்பவரிடம் இதுகுறித்து கூறினார்.
உடனே சஞ்சீவ் குமார் குப்பைகள் கொட்டப்பட்டு இருக்கும் இடத்தில் தனது உதவியாளர்களுடன் தேட ஆரம்பித்தார். மிகவும் பொறுமையுடன் தேடியதில் அவர் 9 பவுன் தங்க நெக்லஸ் இருக்கும் பெட்டியை கண்டுபிடித்தார். இதனை அடுத்து அவர் நேர்மையுடன் நகையை தொலைத்த ரோஜாமணியிடம் ஒப்படைத்தார்.
சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நெக்லஸை பொறுப்புடன் தேடி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதனை அடுத்து நகை மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் ரோஜாமணி பொங்கல் பரிசை சஞ்சீவ்குமார் வீட்டிற்கே சென்று கொடுத்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் சஞ்ஜீவ் குமாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர் என்பது குறிபிடத்தக்கது
BOV Driver Mr Sanjeev Kumar who helps in garbage collection from Zone 3, Div 26, found 9 sovereign gold while segregation, and he handed over to the person who lost it. Recognising his honesty, RDC (North) Thiru. @SivagurulAS appreciated his sincerity at work.#ChennaiCorporation pic.twitter.com/qGO6bgAiSg
— Greater Chennai Corporation (@chennaicorp) January 9, 2022