கர்ப்பிணி மனைவியை நாய் பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொலை: கள்ளக்காதலால் கணவன் செய்த கொடூரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கும் சுஷ்மிதா என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணமாகியது. இந்த நிலையில் சுஷ்மிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு பாண்டீஸ்வரி என்ற திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள பெண்ணூடன் கள்ள காதல் ஏற்பட்டதாக தெரிகிறது
இந்த கள்ளக்காதலை தொடர்ந்து நீடிக்க வைப்பதற்காக பாண்டீஸ்வரியின் தங்கையை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க தினேஷ்குமார் முடிவு செய்தார். நெருங்கிய உறவினர் ஆகிவிட்டால் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து நீடிக்கலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது
இதனால் தம்பிக்கு திருமணம் பேச சுஷ்மிதாவை பாண்டீஸ்வரி வீட்டிற்கு தினேஷ்குமார் அழைத்துச் சென்றார். அங்கு சுஷ்மிதாவை ஒரு அறையில் உட்கார வைத்து விட்டு பாண்டீஸ்வரியுடன் தினேஷ்குமார் சல்லாபத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தற்செயலாக சுஷ்மிதா அதனை பார்த்து விட்டதால் அவரை கொலை செய்ய முடிவு செய்து நாய் கழுத்தில் கட்டும் பெல்ட்டை சுஷ்மிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்
அதன் பின்னர் சுஷ்மிதா கழுத்தில் கையில் கிடந்த நகைகள் எல்லாம் எடுத்துவிட்டு நகைகளை திருட வந்தவன் கொலை செய்தது போல் நாடகமாடி அவரது பிணத்தை வயல்காட்டில் போட்டுவிட்டனர். சில மணி நேரம் கழித்து சுஷ்மிதா வயலில் பிணமாக இருப்பதை அறிந்ததும் தினேஷ்குமார் கதறி அழுது நடித்தார். ஆனால் போலீசாரின் விசாரணையின்போது சுஷ்மிதாவின் கழுத்தில் உள்ள நகைகள் மட்டுமே திருடப்பட்டு இருந்ததாகவும் மற்ற நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் திருடு போகவில்லை என்றும் உண்மையான திருடன் இவ்வாறு விட்டுச்செல்ல வாய்ப்பு இல்லை என்றும் சந்தேகமடைந்த போலீசார், தினேஷ்குமாரை தங்கள் பாணியில் விசாரித்தனர்
அதன் பின்னர் தினேஷ்குமார் உண்மையை ஒப்புக்கொண்டு தானும் பாண்டீஸ்வரியும் சேர்ந்துதான் சுஷ்மிதாவை கொலை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலுக்காக கட்டிய மனைவியை அதுவும் 9 மாத கர்ப்பிணியாக இருந்தவரை கணவரே கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments