கட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்...! மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் மாநில தலைமை ஆணையம் 'ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்' பொறுப்பில் உள்ள 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வு பெற பரிந்துரை செய்துள்ளது.
சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் கடந்த 2011 -2020 வரை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர்களாக பணியாற்றியவர்கள். உதவிப் பேராசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவருவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
உதவிப்பேராசிரியர் தேர்வில், கேள்வித்தாள் வடிவமைப்பில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. சரியான விடையளித்தவர்களுக்கு, மதிப்பெண்கள் வழங்காமல் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், தேர்வர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக நடைபெற்ற தேர்வுகளில், வெளிப்படைத்தன்மை இல்லை என்று தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
மாநில தகவல் ஆணையம், தமிழகத்தலைமை செயலாளருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பேரில் ஓரிரு நாட்களில் தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புகாரளித்துள்ள 9 ஐஏஎஸ் அதிகாரிகளில், சுர்ஜித், விபு நாயர் ஆகியோரை தவிர 7 பேர் பணியில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout