#CAA #NRC.தொடரும் போராட்டங்கள்.. உத்திர பிரதேசத்தில் 9 பேர் பலி.
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதோடு மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய தலைமை காவல் அதிகாரி ஓ.பி.சிங் கூறும்போது, உயிரிழந்தவர்கள் யாரும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகவில்லை. எனினும், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஒரு துப்பாக்கி தோட்டாக்களை கூட பயன்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு போலீசார் கூறும்போது, அப்படி ஏதேனும், துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், அது போராட்டகர்களே நடத்தியிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலில், பிஜ்னோரில் 2 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பல், ஃபிரோசாபாத், மீரட் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்களில் 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும் காயமடைந்துள்ளனர்.குடியுரிமை திருத்தச் சட்டமானது வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அசாமில் 1985-ல் ஏற்படுத்தப்பட்ட விதிகளை ரத்து செய்வதாகவும், சட்ட ரீதியாக அசாமுக்கு வருபவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்வதாக கூறி போராட்டம் நடைபெறுகிறது.
மற்ற இடங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு குடியுரிமை சட்ட திருத்தம் எதிரானது என்றும், மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி போராட்டங்கள் நடக்கின்றன. நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திரண்ட பெரும் கூட்டத்தினர், போலீசாரை நோக்கி கல் வீச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து, தடியடி நடத்தி கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments