close
Choose your channels

நடிகை ராதாவின் நடனம்.. மகிழ்ச்சியில் முத்தமிட்ட 80s நடிகர்!

Wednesday, November 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் 80s நடிகர்கள் ரியூனியன் கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா நடனம் ஆடியபோது மகிழ்ச்சியில் 80s நடிகர் ஒருவர் அவருக்கு முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 80களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடிகர்கள் ஒன்று கூடாத நிலையில் சமீபத்தில் மும்பையில் 80s நடிகர்கள் இணைந்த ரீயுனியன் நிகழ்வு நடந்தது.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் நடிகை பூனம் தில்லான் ஆகிய இருவரும் மும்பையில் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி ஆகியோர் கலந்து கொண்டதாக புகைப்படங்களின் மூலம் தெரியவருகிறது.

இந்தநிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த ராதா, அவர் நடித்த பாடலுக்கு நடனமாட அந்த நடனத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்த நடிகர் சிரஞ்சீவி அவருக்கு முத்தமிட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment