close
Choose your channels

ரஜினி படம் ரிலீஸானா ஊருக்கே டிக்கெட் எடுப்பேன்: சந்தானம் நடித்த '80's பில்டப்' டீசர்..!

Saturday, November 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடிப்பில் உருவான ‘80's பில்டப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் ரசிகர்கள் மத்தியில் கடந்த 80 களில் நடந்த சண்டை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது ரசிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.

ரஜினி படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் திடீரென சந்தானம் தாத்தா இறந்து விட அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது என்ற காமெடி காட்சிகள் தான் இந்த படம். இயக்குனர் கல்யாண் என்ற படத்தை கலகலப்பாக ரஜினி, கமல் ரசிகர்களை கவரும் வகையில் இயக்கி உள்ளார்.

சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்த இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சுந்தர்ராஜன், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவான இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment