'எதிர்நீச்சல்' சீரியலில் திடீரென எண்ட்ரி ஆன 80களின் நடிகை.. யார் இவர் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் 80களில் திரைப்படங்களில் நடித்த நடிகை எண்ட்ரி ஆகவுள்ளார்.
கூட்டுக்குடும்பமாக அண்ணன் தம்பிகள் வாழும் ஒரு குடும்பத்தில் அவர்களது மனைவிகளாக படித்த பெண்கள் வருகின்றனர். ஆனால் அந்த பெண்கள் வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில் கடைசி மருமகளாக வரும் ஜனனி அந்த வீட்டை மாற்றவும் அந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் முடிவு செய்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள், ஜனனிக்கு மற்ற மருமகள்கள் தரும் ஆதரவால் ஏற்படும் களேபரங்கள் ஆகியவைதான் இந்த சீரியலின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலின் முக்கிய கேரக்டரில் மாரிமுத்து நடித்துவரும் நிலையில் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீரியலில் அஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகா, டிடியின் சகோதரி பிரியதர்ஷினி , ஹரிப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர்
இந்த நிலையில் இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் 80களின் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மோகன் நடித்த ’தென்றலே என்னை தொடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஜெயஸ்ரீ தான் இந்த சீரியலில் நடிக்க உள்ளார். இவர் ’தென்றலே என்னை தொடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் கடைசியாக இவர் ’மணல் கயிறு 2’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆன ஜெயஸ்ரீ நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் சின்னத்திரை உலகில் என்ட்ரி ஆக இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com