அரசியல் ஆக்கப்படுகிறது: '800' திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ’800’ திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முத்தையா முரளிதரன்‌ வாழ்க்கை வரலாறில்‌ விஜய்‌ சேதுபதி நடிக்க இருக்கும்‌ 800 திரைப்படம்‌ பல்வேறு வகையில்‌ அரசியல்‌ ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்‌. 800 திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது. தமிழகத்தில்‌ இருந்து தேமிலைத்‌ தோட்டக்‌கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில்‌ இருந்து வந்த முரளிதரன்‌ எப்படி பல தடைகளைத்‌ தாண்டி உலக அளவில்‌ சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார்‌ என்பது தான்‌ இத்திரைப்படத்தின்‌ கதையம்சம்‌.

இத்திரைப்படம்‌ இளைய சமுதாயத்துக்கும்‌ வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும்‌ தங்கள்‌ வாழ்க்கைப்‌ பயணத்தில்‌ எவ்வளவு தடைகள்‌ வந்தாலும்‌ தடைகளைக்‌ கடந்து சாதிக்க முடியும்‌ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும்‌ படமாக இருக்கும்‌. இத்திரைப்படத்தின்‌ தயாரிப்பாளராக ஒன்றை மட்டும்‌ நிச்சயமாக சொல்ல முடியும்‌ இத்திரைப்படத்தில்‌ ஈழத்தமிழர்களின்‌ போராட்டத்தை சிறுமைப்படுத்தும்‌ விதத்திலான காட்சியமைப்புகள்‌ கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில்‌ இலங்கையை சேர்ந்த பல தமிழ்‌ திரைத்துறை கலைஞர்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கலைஞர்கள்‌ பங்குபெற இருக்கின்றனர்‌. அதன்‌ மூலம்‌ இலங்கை தமிழ்‌ திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள்‌ திறமையை உலக அரங்கில்‌ வெளிக்‌ காட்ட இந்த படம்‌ நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத்‌ தரும்‌ என்பதை நாங்கள்‌ முழுமையாக நம்புகிறோம்‌.

கலைக்கும்‌ கலைஞர்களுக்கும்‌ எல்லைகள்‌ கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும்‌ மனிதத்தையும்‌ இணைப்பது தான்‌ கலை. நாங்கள்‌ அன்பையும்‌ நம்பிக்கையும்‌ மட்டுமே விதைக்க விரும்புகிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும்

கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது

தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரன் முடிவுக்கு வந்திருப்பார்: விஜய்சேதுபதிக்கு கடிதம் எழுதிய பிரபலம்!

பெண் கவிஞர் தாமரை விஜய்சேதுபதிக்கு இதுகுறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது

நடிகருக்கு ரூ.2 கோடி மதிப்பு காரா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை!

சமீபத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கினார்கள். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன இந்த காரின் மதிப்பு சுமார் 2 கோடி என்பதும்

இரண்டாம் பாகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபல நடிகை!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசா, 'ராஜா ராணி' என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார் என்பது தெரிந்ததே.