close
Choose your channels

நீ என்ன சிங்களவனா? .. இல்லை கிரிக்கெட்டர்.. முத்தையா முரளிதரனின் '800' டிரைலர்..!

Tuesday, September 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’800’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் அதன் பிறகு ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து தற்போது ’ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கனிமொழி’ என்ற படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை சச்சின் வெளியிட்டுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது.

இலங்கை போர் பின்னணியுடன் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வாழ்க்கையை விளக்கும் வகையில் இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் உள்ளன. ஆரம்பத்தில் முத்தையாவின் பவுலிங் பாராட்டப்படுவது, அதன் பிறகு அதே பவுலிங் விமர்சனம் செய்யப்படுவது போன்ற காட்சிகள் உள்ளன.

நான் என்னை தமிழனாக மட்டும் பார்க்கவில்லை என்று முத்தையா முரளிதரன் கூறும்போது பின்ன சிங்களவனா? என கேள்வி கேட்கும்போது ’இல்லை நான் கிரிக்கெட்டர் என்று கூறுவதுடன் இந்த டிரைலர் முடிவடைந்துள்ளது. இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment