மருத்துவ பில் கட்டாததால் கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட முதியவர்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
80 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக கட்டிலோடு கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தபோது அவர் கிட்டத்தட்ட டிஸ்சார்ஜ் செய்யும் நிலைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் பில் கட்டணத்தை கேட்ட போது, அவரால் மருத்துவமனை நிர்வாகம் கேட்ட பணத்தை கட்ட முடியவில்லை.
இதனை அடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் அவர் தப்பிச் சென்று விடாத வகையில் கட்டிலோடு சேர்த்துக் கயிற்றால் கட்டி வைத்திருந்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த மருத்துவமனையில் இருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து மாவட்ட கலெக்டர் தனது ஒரு குழுவை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த விசாரணையின் அடிப்படையில் அளிக்கப்படும் அறிக்கையின்படி, இந்த தகவல் உண்மையாக இருந்தால் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காலத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மனிதநேயம் இன்றி நடந்து கொள்வதாக ஏற்கனவே பலர் குற்றம் சாட்டி வரும் நிலையில், பில் கட்டாதற்காக 80 வயது முதியவரை கட்டிலோடு கட்டிவைத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout